கோவை: பெண் யானை இறப்பு- குட்டி தவிப்பு !

கோவையில் வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது ஒரு மாத வயது கொண்ட குட்டியானை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் அருகில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதும் தெரிய வந்தது.

Update: 2024-12-24 12:22 GMT
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் அடிக்கடி காணப்படும் காட்டு யானைகள், அண்மையில் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் குட்டிகளுடன் சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டிய போது, ஒரு மாத குட்டியானை தனியாக இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், அருகிலேயே பெண் யானை இறந்து கிடப்பது கள்கண்டெடுக்கப்பட்டது. இறந்த யானை குட்டியின் தாயா என்பதை உறுதிப்படுத்த வனத்துறையினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இறந்த யானை குட்டியின் தாயாக இருந்தால், குட்டியை அதன் கூட்டத்துடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News