சேதமடைந்த மலைப்பகுதி சாலையை எம்பி ஆய்வு
சித்தேரி செல்லும் மலைச்சாலையில் மழையால் சேதமடைந்த சாலை பணிகளை தர்மபுரி எம்பி ஆய்வு
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தேரி செல்லும் மலை சாலையில் பெஞ்சல் புயலின் போது மண்சரிவு ஏற்பட்டது. இந்த இடத்தினை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அடிப்படையில் மணல் முட்டைகளை வைத்து தற்காலிகமான சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வீதம் மையால் மீண்டும் சாலை சேதம் அடைந்தது இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்த தகவல் அறிந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சாலையை சீரமைக்க வேண்டிய பணிகளை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை செய்தனர். உடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.