ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு.
ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அரியலூர், டிச.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக திமுக கட்சி சார்பில் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் திமுக நகர செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி, தலைமையில் திமுக, திக கட்சியினர் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் இருந்து கடைவீதி வழியாக அமைதி ஊர்வலமாக சென்று திருச்சி சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில சட்ட திட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர் கலந்துகொண்டு பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் தனசேகர் திக் கட்சி சி.காமராஜ், திமுக திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.