ஜெயங்கொண்டத்தில் நீதிமன்ற வளாகம் முன்பு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு

ஜெயங்கொண்டம் அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2024-12-24 13:06 GMT
அரியலூர், டிச.24- ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்த ஒரு வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் 3 போலீசார்கள் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

Similar News