குப்பை கொட்டினால் அபராதம் ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
குப்பை கொட்ட தடை விதித்து கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் இருந்து கோனேரிகுப்பம் ஊராட்சி, அசோக் நகருக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில், அப்பகுதியினர் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, குப்பையில் வீசப்படும் கெட்டுப்போன உணவு பொருட்கள், மீன், சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதித்து கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதில், 'இந்த இடத்தில் குப்பை கொட்ட கூடாது. மீறினால் ஊராட்சி சட்டத்தின்படி அபராதமும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த இடம் 'சிசிடிவி' வாயிலாக கண்காணிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.