உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கலாம் என என தீர்ப்பு வழங்கியும், தமிழக அரசு அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்தும், உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தியும், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சௌ.சித்திரவேல் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாகை நகர செயலாளர் முகமது சித்திக் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.