சாமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்
கழிப்பிடம் கட்ட பூமி பூஜை
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி ஏ.ஆர். காலனி பகுதியில் கழிப்பிட வசதி வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒன்றிய கவுன்சிலர் லலிதா, பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தார். இதையடுத்து அந்த பகுதியில் கழிப்பிடம் கட்ட பூமிபூஜை நடந்தது. இதில் பங்கேற்க வந்தவர்களை ஒன்றிய கவுன்சிலர் லலிதா வரவேற்றார். ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ குமரன் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அருண் பிரசன்னா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில் குமார், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கோபால்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் உமா மகேஸ்வரி, பொறியாளர் அணி நிர்வாகி உமா சங்கர், கிளை செயலாளர் நல்லதம்பி, தி.மு.க. நிர்வாகிகள் பாஸ்கர், ராமன், சரவணன், அஜித் குமார், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஓமலூர் ஒன்றிய அமைப்பாளர் அருள் பாலாஜி நன்றி கூறினார்.