ஊத்தங்கரை: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
ஊத்தங்கரை: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த மாதம் 8-ம் தேதி அன்று நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையைத் தொடர்ந்து, நேற்று தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் ஊத்தங்கரை அலுவலகத்தில் சார்பதிவாளர் மோனிகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த மாதம் நடந்த சோதனையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 1,85,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.