சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-25 02:03 GMT
அரியலூர், டிச.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.க.குமார் தலைமையில் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் குழந்தை ராஜவேல் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அன்புதாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் வாசு சக்தி, மாவட்ட துணை செயலாளர் ஹஜ்ஜிமுகமது , மாவட்டத் தலைவர் பாம்சப் சுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தலைவர் சந்திர மணிவண்ணன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற இளைஞரணி தலைவர்கள் அருள்மணி, வீரமுத்து, ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் கொளஞ்சி, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் குமார், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வீராசாமி, ஜெயங்கொண்ட நகர தலைவர் அரச கொளஞ்சி, நகர செயலாளர் கங்காசலம், நகர பொருளாளர் சிவகுரு, ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் தாஸ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவன்செயல், நகர இளைஞரணி தலைவர் மணிமாறன், சமாஜ் கட்சி போராளி சூர்யா, நகர பொறுப்பாளர்கள் சந்துரு, சுபாஷ், பிரவீன்சர்மா, சதீஷ், கவிச்செல்வன், ஸ்ரீமன், பிரபாகரன், மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News