வால் விளையாட்டு வீராங்கனியை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள வாள் விளையாட்டு வீராங்கனை எம்.தமிழ்செல்வி தமிழ்நாடு முதலமைச்சர் நிறைந்த மனதோடு நன்றி.

Update: 2024-12-24 13:24 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகள், பாராலிம்பிக், ஆசிய பாரா போட்டிகள், (மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட) தேசியளவிலான போட்டிகள், ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமென்வெல்த் போட்டிகளின் பட்டியலில் உள்ள விளையாட்டுகளில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2024-25ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், துணை முதலமைச்சர் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் 23.12.2024 அன்று வழங்கினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற வாள் விளையாட்டு வீராங்கனை எம்.தமிழ்செல்வி அவர்கள் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், கூட்டுறவு துறையின் நாமக்கல் மண்டலத்தில் முதுநிலை ஆய்வாளராக பணி நியமன ஆணை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து பெற்றார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள வாள் விளையாட்டு வீராங்கனை எம்.தமிழ்செல்வி நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் நன்றி தெரிவித்ததாவது, என் பெயர் தமிழ்செல்வி. என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர். நான் கடந்த 6 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி வாள் விளையாட்டு போட்டிக்கு பயிற்சி பெற்று வந்தேன். விடுதியில் தங்கியவாரே செல்வம் கல்லூரியில் பி.இ, மற்றும் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் எம்.இ பயின்று பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். நான் கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற வாள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றேன். தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். இதனடிப்படையில் தமிழ்நடு அரசின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு துறையின் நாமக்கல் மண்டலத்தில் முதுநிலை ஆய்வாளராக பணி நியமன ஆணை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் எங்களை போன்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உரிய பயிற்சி அளித்தல், ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறையில் பணி நியமனம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் என்னை போன்ற அனைத்து விளையாட்டு வீரர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

Similar News