வெள்ளகோவிலில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கிய ரோட்டரி நிர்வாகி 

வெள்ளகோவிலில் கர்ப்பிணிகளுக்கு 110 வது வாரம் ஊட்டச்சத்து வழங்கிய ரோட்டரி நிர்வாகி 

Update: 2024-12-24 13:57 GMT
வெள்ளகோவில் கடந்த 109 வாரமாக அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ரோட்டரி  சார்பில் ஊட்டச்சத்து பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த  ஊட்டச்சத்து  பொருட்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகின்றது. அதில் பேரிச்சம்பழம், முட்டை, பாசிப்பருப்பு,உளுந்தம் பருப்பு,கடலை பரப்பி உட்பட பல்வேறு ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளடக்கியது ஆகும். இன்று செவ்வாய்க்கிழமை 110 வது வாரம் வழக்கம் போல் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கலந்து கொண்டு ஊட்டச்சத்து பொருட்கள் பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்வில் மருத்துவர் திருமதி ராஜலட்சுமி,அட்மின் சேர்மன் ரொட்டேரியன் ராசி சின்னசாமி, தலைவர்  ரொட்டேரியன் சுவாமிநாதன், செயலாளர்  ரொட்டேரியன் சிட்டி பிரபு, ரொட்டேரியன் பிரபு ஆடிட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News