காங்கேயம் அருகே அனுமதியின்றி மரம் வெட்டி கடத்தல் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் - சமூக ஆர்வலர்கள் வட்டாட்சியரிடம் புகார்
காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் கடந்த 10 நாட்களில் வெட்டி கடத்தப்பட்டு உள்ளதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகமோ,ஊராட்சி செயலாளர்,கிராம நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மரத்தை வெட்டி கடத்தி விற்பனை செய்தவருக்கு உடந்தையாக செயல்பட்டனர் என குற்றச்சாட்டு;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் கடந்த 10 நாட்களில் வெட்டி கடத்தப்பட்டு உள்ளதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகமோ,ஊராட்சி செயலாளர்,கிராம நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மரத்தை வெட்டி கடத்தி விற்பனை செய்தவருக்கு உடந்தையாக செயல்பட்டனர் என சமூக ஆர்வலாளர் குற்றச்சாட்டை முன்வைத்து காங்கேயம் வட்டாச்சியர் மோகனன் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். காங்கேயம் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வேலி காடுகளாகவும், விலைநிலங்களாகவும், கால்நடைகள் மேயும் பச்சை நிலப் பரப்பாகவும் உள்ளது. மேலும் கிராமத்து சாலைகளின் இருபுறமும் காணப்படும் மரங்கள் பல்வேறு இடங்களில் வெட்டி கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பசுமை இழந்து நிலத்தின் வெப்பநிலை அதிகரிக்கவும், நிலத்தில் ஈரப்பதம் குறைவும், தேவையற்ற முட்புதராகவும் மட்டுமே காணப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களாக வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாம்பவலசு செல்லும் சாலையில் மரத்தை சமூக விரோதிகள் வெட்டி உள்ளதாகவும் புகாரை தொடர்ந்து ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வேர்கள் என்ற தன்னார்வலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கர கோபால் தலைமையில் காங்கேயம் வட்டாச்சியர் மோகனனிடம் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் மரம் வெட்டும் பணிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றதாகவும் வெட்டப்பட்ட மரங்கள் அதே இடத்தில் துண்டுகளாக வெட்டப்பட்டு இரவு பகலாக லாரியில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் மரம் வெட்ட வேண்டும் என்றால் கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளாளர்,வட்டாச்சியர் இறுதியாக வருவாய் கோட்டாட்சியர் அகியோர்களிடம் மனு கொடுக்கப்பட்ட மரம் வெட்டுவதற்கு முறையான ஆதாரம் ஆகியவைகளை வழங்கிய பின்னரே வருவாய் துறை அனைத்து அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து பின்னரே மரம் வெட்ட அனுமதி வழங்கப்படும். அனால் இங்கோ எந்த அதிகாரிகளிடமும் அனுமதி பெறாமல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டுகின்றனர். மேலும் மரம் வெட்டுவதற்கு 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போதும் ஒரு அதிகாரிகள் கூட வீரணம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் செயலாளர், வீரணம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி யாரும் கடந்த 10 நாட்களாக கண்டுகொள்ளவில்லை எனவும் இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தி விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தால் ஊனமுற்ற ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அவருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீரணம்பாளையம் ஊராட்சியில் யாருடைய பின்னணியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், மரம் வெட்டியும் கவனிக்காமல் இருந்த அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். மேலும் மரம் வெட்டியவர்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து கொடுக்கவேண்டும் என் தெரிவிக்கின்றனர்.