ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெண்மணி தியாகதியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கொடி ஏற்றி வீரவணக்கம்.
ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெண்மணி தியாகதியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.;
அரியலூர், டிச.25- ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆமணக்கந்தோண்டி, புதுச்சாவடி, சின்னவளையம், முத்துச்சேர்வாமேடம், கீழக்குடியிருப்பு, ஜெயங்கொண்டம் கீழத்தெரு, அடிப்பள்ளதெரு, மகிமைபுரம், உட்கோட்டை, மீன்சுருட்டி புதுத்தெரு, சலுப்பை, வெத்தியார்வெட்டு உள்ளிட்ட கிளைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் கட்சியின் செங்கொடி ஏற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.தியாகராஜன், ஆர்.ரவீந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் இஎம்.மைதீன்சா, ஆர்.ராமலிங்கம், எஸ்.குமார் ,பி.பத்மாவதி, ஆர்.கோவிந்தராஜ், ஆர்.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.