ஜெயங்கொண்டத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தின மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா பங்கேற்பு.

ஜெயங்கொண்டத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தின மாவட்ட சிறப்பு பேரவை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா வெண்மணி தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து பேசினார்.;

Update: 2024-12-25 11:04 GMT
அரியலூர், டிச.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் தனியார் கூட்டரங்கில் வெண்மணி தியாகிகள் நினைவு தின மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில்  நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் வெண்மணி தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றி பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கந்தசாமி, பி.துரைசாமி, டி.அம்பிகா, வி.பரமசிவம், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் எம்.வேல்முருகன், செந்துறை வட்ட செயலாளர் கு.அர்ச்சுனன், திருமானூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சாமிதுரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர் இளவரசன், பி.பத்மாவதி, எஸ்.மீனா, எஸ்.குமார், ஆர்.செந்தில்வேல், நீலமேகம் டி.தியாகராஜன், இ.எம்.மைதின்சா, என்.அருணாச்சலம், ஆர்.ரவீந்திரன், எம்.சந்தானம், எஸ்.மலர்கொடி, மாணவ சங்க மாவட்ட செயலாளர் குணா  உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News