தாராபுரம் தனியார் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒருவர் கைது

விடுதியில் தங்கிப் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு பாலியல் தொல்லை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது. ;

Update: 2024-12-25 11:11 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விடுதி காப்பாளர் போக்கோ சட்டத்தின் கீழ் சரண் (25) கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளியின் தாளாளர் சுரேஷ்குமார் (50) பாதிக்கப்பட்ட மாணவர்களை அடித்ததற்காகவும் ,கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே மாணவர்கள் தலைமை விடுதி கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாலியல் தொல்லை குறித்த தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் ராம்பாபு (34) வழக்கு பதிவு செய்யப்பட்டு மகளிர்  காவல்துறையினர்  கைது செய்தனர் . இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொண்டனர் இப்போது அதே பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த தேனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவரது மகன் ராஜசேகர பாண்டியன் வயது 33 இவர் தற்போது தாராபுரம் பாத்திமா நகரில் குடியிருந்து கொண்டு சமூக அறிவியல் ஆசிரியராக தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்த வழக்கில் இவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச் சம்பவம் தாராபுரம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News