காங்கேயத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நினைவேந்தல் மற்றும் வீரவணக்க நாள் அனுசரிப்பு 

காங்கேயத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் பெரியார் நினைவேந்தல் மற்றும் டிசம்பர் 25 கீழ்வெண்மணி வீரவணக்க நாள் அனுசரிப்பு ;

Update: 2024-12-25 11:31 GMT
டிசம்பர் 24  தந்தை பெரியாரின்  நினைவு நாள் மற்றும்  டிசம்பர் 25 கீழ்வெண்மணி  ஈகியர்  வீரவணக்க நாள் ஆகியவை இன்று புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்  காங்கேயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை ஸ்டாலினும் கருத்துரையை திராவிடர் கழக மணிவேல் , புரட்சிகர இளைஞர் முன்னணி செந்தூரன், கவி, பெரியாரின் பெண்கள் அமைப்பு ஜென்னி, நன்றியுரை  சுப்பிரமணி தெரிவித்தார். நிகழ்வின் இறுதியில் தந்தை பெரியார் மற்றும் கீழ்வெண்மனி ஈகியர் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. முழக்கம் மதிமலர், நிகழ்வின் ஏற்பாடுகளை புரட்சிகர இளைஞர் முன்னணி - செய்திருந்தனர்.

Similar News