விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கை அருகே ஒக்கப்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஒக்கப்பட்டி ஊராட்சி ஒக்குப்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்தறை சார்பில் TN-IAMP -PHASE -II உப்பாறு உப வடிநிலப்பகுதி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுபயிற்சி வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மதுரைச்சாமி தலைமையில் நடைபெற்றது . சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி வேளாண்மைத்துறை திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார். விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சக்திகணேஷ் விதைப்பண்ணை அமைக்கும் முறைகள் பற்றி கூறினார். மலம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மோகன்தாஸ் கால்நடைத்துறை திட்டங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு, தடுப்பூசியின் அவசியம் மற்றும் நோய் தடுப்பு முறைகள், தீவனங்கள் அளிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துகூறினார். வேளாண்மை அலுவலர் ஞானப்பிரதா உயிர் உரங்கள் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் கூறினார். TN- IAMP தலைமை செயல் அலுவலர் மெர்லின் சோபா கேழ்வரகு பர்பி செய்யும் முறைகள் பற்றிய நேரடி செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார். இப்பயிற்சியினை உதவி வேளாண்மை அலுவலர் பாண்டீஸ்வரன், அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் தம்பிதுரை, ராஜா ஏற்பாடு செய்தனர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.