புஞ்சை புளியம்பட்டியில் பா.ஜனதா நிர்வாகி கைது
புஞ்சை புளியம்பட்டியில் பா.ஜனதா நிர்வாகி கைது
புஞ்சை புளியம்பட்டியில் பா.ஜனதா நிர்வாகி கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் செயல்பட்டு வரும் ஸ்பிரிங்டெல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் விழா கொண் டாடப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு என்ற கிறிஸ்தவ புத்தகம் வழங்கப்பட்டதாக பா.ஜனதா ஈரோடு மாவட்ட இளைஞர் அணி பொதுச்செய லாளர் ஹரிஹரன் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹரிஹரன் தலைமையில் 8பேர் பள்ளிக்குச் சென்று முதல்வரிடம், மாணவர்களுக்கு மத மாற்ற புத்தகம் வழங்கிய தாக கூறி விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் இதை கண்டித்து கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் முதல்வர், புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைதல், பள்ளி முதல்வரை மிரட்டுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்