ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் மீட்பு
செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டார்
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஆர்.எஸ்.மாத்தூர் ரயில்வே கேட் அருகில் சுமார் 32 வயது மதிக்கதக்க முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் வியாழக்கிழமை கிடந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு , அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.