ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் வளாக நேர்காணல்
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் வளாக நேர்காணல் நடைபெற்றது.
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை புரூடில் இன்டெக்கரேடேட் சர்வீஸ் சொலிசன் நிறுவனம் கலந்து கொண்டு, 186 மாணவ,மாணவியர்களிடம் பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி, அதில் தகுதியான 86 பேரை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு அந்நிறுவனத்தைச் சார்ந்த வினோதினி, சுரேஷ், கல்லூரி முதல்வர் ரமேஷ் ஆகியோர் பணி அழைப்புக் கடிதங்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை அக்கல்லூரியின் வேலைவாய்ப்புபுல ஒருங்கிணைப்பாளர் ம. இராசமூர்த்தி மற்றும் இணைப் பேராசிரியர்கள், இயற்பியல் துறையினர் செய்திருந்தனர்.