இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா

100 இடங்களில் கட்சி கொடி ஏற்றம்

Update: 2024-12-27 03:40 GMT
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர். மாசேத்துங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.சம்பந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் கே.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தின் அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 100 இடங்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலாஜி, ஜி.சங்கர், ரமேஷ், எஸ்.சிவதாஸ், எம்.இளையராஜா, கிளைச் செயலாளர்கள் சந்திரகாசன், கே.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News