ஆற்காட்டில் ஒன்றிய குழு கூட்டம்!
ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம, ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்யநாதன் தலைமையில நடந்தது. துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாங்காடு ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அரசுப்பள்ளி சமையல் கூடம் பழுது பார்ப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர். கோபால கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், வளர்ச்சி திட்ட பணி கள் செய்யப்பட்டதற்கானபில் தொகை வழங்குது காலதாமதம் ஏற்படுகிறது. உடனடியாக வழங்க வழி வகை செய்ய வேண்டும் என்றார். சுலோச்சனா சண்முகம் பேசுகையில், கூராம்பாடி கிராமத்திற்கு மாணவர்களின் நலன் கருதி காலை, மாலையில் பஸ் விட பலமுறை கூட்டத்தில் தெரிவித்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்யநாதன் பேசுகையில், பனபாக்கம் சிப்காட் பகுதியில் காலணி தொழிற்சாலைக்கு தமி ழக முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். தொழில் முன்னேற்றத்திற்கும், வேலை பவாய்ப்புக்கும் வழிகாட்டியாக உள்ள முதல்-அமைச்சருக்கு ஒன்றியக்குழு சார்பில் நன்றி தெரிவித்தனர்.