மின்னல் தாக்கி விவசாயி பலி

பலி

Update: 2024-12-27 03:48 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை தாலுகா எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் ஆனந்த்அமல்ராஜ், 28; விவசாயி. இவர் நேற்று காலை 6.30 மணியளவில் மாட்டிற்கு சோளத்தட்டு அறுப்பதற்காக வயல் பகுதிக்கு சென்றார். அப்போது மழை பெய்ததால் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியதில் ஆனந்த்அமல்ராஜ் மயங்கி விழுந்தார். உடன் அருகில் இருந்தார்கள் அவரை மீட்டு எறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News