பொதுக்குழு கூட்டம்

பெருந்துறை அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்

Update: 2024-12-27 03:51 GMT
பெருந்துறை அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் 9-வது பொதுக்குழு கூட்டம் மாலை 6-00 மணிக்கு அலுவலக அரங்கில் அறக்கட்டளையின் தலைவர் திரு. டி.என். சென்னியப்பன் தலைமையில் நடைபெற்றது.. துணைத் தலைவர் இன்ப்ரா டெக்ஸ் திரு. பி.எஸ்.ஜி. சக்திவேல்...இணைச் செயலாளர் அக்னி ஸ்டீல்ஸ் திரு. சின்னசாமி...சக்தி மசாலா திருமதி. சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. பொருளாளர் வி.வி.நேசனல் திரு. வி. செந்தில் முருகன் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்... செயலாளர் சேப்டி திரு. சி. சௌந்தரராஜன் ஆண்டறிக்கையுடன் செயலர் அறிக்கையையும் வாசித்தார்... அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர்...ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு. பி.சி.துரைசாமி சிறப்புரை நிகழ்த்தினார்.... ஈரோடு அரிமா முன்னாள் ஆளுநர் அரிமா. கல்யாணசுந்தரம் டயாலிசிஸ் சிகிச்சை குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்..... பெருந்துறை பகுதி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு அரிமா சங்கத்துடன் இணைந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பது எனவும் அமைதிப்பூங்காவின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் (சோலார்)சூரிய மின் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் சுமார் ஒரு இலட்சம் மதிப்பிலான 10 கிரைனைட் இருக்கை வசதிகளை நன்கொடையாக வழங்கிய ஜி.ஆர். கிரைனைட் திரு. குணசேகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல் உட்பட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது... நிறைவாக இணைச் செயலாளர் பல்லவி பரமசிவன் நன்றி கூறினார்...

Similar News