உழவர் ஆலோசனை மைய கட்டடம் திறப்பு

திறப்பு

Update: 2024-12-27 03:52 GMT
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.84 லட்சம் மதிப்பிலான வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணித்துறைத் துறையின் சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். விழாவில், ஆலோசனை மைய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த மையத்தில் மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கிடவும், வணிக இணைப்பினை ஏற்படும் வகையில் செயல்படும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர்கள் (வேளாண் வணிகம்) பிரேமா, அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுபாடு) பொனராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் சரவணபவ மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குனர்கள், முன்னோடி விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News