விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும்

தரப்படும்

Update: 2024-12-27 03:57 GMT
திருக்கோவிலுார் அணைக்கட்டு உடைப்பை பார்வையிட்ட கலெக்டர் பழனி, பாதிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கூறினார். பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில், திருக்கோவிலுார் அணைக்கட்டின் இடது புறக்கரை உடைந்து விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நேற்று விழுப்புரம் கலெக்டர் பழனி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து கூறியதாவது. வெள்ளத்தால் அணைக்கட்டின் இடது புறம், பம்பை வாய்க்கால் மற்றும் அருமலை ஏறி வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை தற்காலிகமாக சரி செய்யும் வகையில் மணல் மற்றும் கற்களைக் கொண்டு நீர் வெளியேறாத வண்ணம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாய நிலங்களில் உள்ள தரை கிணறு, ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின்மோட்டார்கள் போன்றவைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால், இதற்கான நிவாரண உதவிகளும் பெற்று தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏமப்பேர் செல்லும் சாலை முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் அதனையும் சரி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு கலெக்டர் பழனி தெரிவித்தார்.

Similar News