சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்
காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியடிகள் பதவி ஏற்று 100 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் முள்ளுவாடி கேட் அருகே கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் கட்சி கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி.சுப்பிரமணியம், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சங்க ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.