சேலத்தில் நுகர்வோர் தினவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு
சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன் சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா சின்னதிருப்பதி ஜெய்ராம் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிசாமி வரவேற்றார். நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பசுமை தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், ஜெகன் மோகன் ஆகியோர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நுகர்வோர், கடமைகள் மற்றும் உரிமைகள் விழிப்புணர்வு குறித்து அமைப்பின் நிறுவனர் பூபதி ேபசினார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு குரு ராஜா, கோபி ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.இதனை தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காக நுகர்வோர் உரிமைகள் பற்றியும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. முடிவில், துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வெங்கடேசன், பாஸ்கர், ஸ்ரீதர், சரவணன், பூபதி முருகவேல், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.