கலெக்டர் தலைமையில் கூட்டம்

Update: 2024-12-27 04:40 GMT
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்; விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்;, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்; தெரிவித்தாவது,ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 714.14மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 98.46 அடியாகவும்,27.54 மி.கன அடிநீர் இருப்பும் உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 14.1 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 8.4மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 21.8 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 85.1 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 6215 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 4813 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3381 மெட்ரிக் டன்னும் மற்றும்; காம்ப்ளக்ஸ் 9336 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்தபகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப்பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமானஅளவுதனியார் மற்றும் கூட்டுறவுசங்கங்களில் இருப்புவைக்கப்பட்டுவிநியோகம் செய்யப்பட்டுவருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார்; விபரங்களைசரிபார்த்துஉறுதிசெய்தால் (EKYC) மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்துநிதியுதவிபெறமுடியும் எனமத்தியஅரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதிஉதவிபெற்றுவரும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார்எண்ணை இணைக்கவேண்டியதும் அவசியமாகும். இதுவரைஆதார்எண்ணைசரிபார்த்துஉறுதிசெய்யாதவிவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார்எண்ணை இணைக்காதவிவசாயிகள்; உடனடியாகஅந்தந்தபகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப்பயன்கள் தொடர்ந்துகிடைப்பதைஉறுதிசெய்திடவேண்டும் என தெரிவித்தார்.தோட்டக்கலைத்துறை மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைபுழு,ரூகோஸ் வெள்ளை ஈ போன்ற பூச்சிகள் தாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தற்சமயம் வேர் வாடல் நோயானது ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் தென்படுவதாகவும் அதற்கு உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.கால்நடைதுறையின் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயினை தடுக்க கிராம அளவில் முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கால்நடை மருத்துவர் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டர், இன்றைய தினம் விவசாயிகளிடமிருந்து 40 கோரிக்கை மனுக்களை பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்

Similar News