திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட

வெள்ளி விழா ஆண்டு பேச்சுப் போட்டி

Update: 2024-12-27 04:42 GMT
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, நாகை மாவட்ட நூலக ஆணை குழு மற்றும் வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவ சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், குழல் இனிது யாழ் இனிது மற்றும் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் குறளில் அதிகார வைப்பு முறையும் ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் ஜான் பாஷா தலைமை வைத்தார். நாகை மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வைத்தார். நாகை மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் ஜவகர் வரவேற்றார். பேச்சுப் போட்டியில், தலைமை ஆசிரியர் (ஓய்வு) புலவர் மு.சொக்கப்பன், ஆசிரியர்கள் ரஞ்சனி தேவி, ராஜ்மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெற்றனர். போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ,, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி கோ.ஜனனி முதல் ரிசையும், மகளிர் கல்லூரி மாணவி நூர்ஜெசிமா இரண்டாம் பரிசையும், வாசகர் பாலசுந்தரம் மூன்றாம் பரிசையும் பெற்றனர், போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசாக, வருகிற 31-ம் தேதி அன்று நடைபெறும், வெள்ளி விழா நிறைவு விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்க உள்ளார். மேலும், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், நூலகர் ம.சந்திரன் நன்றி கூறினார்.

Similar News