சாலையில் கிடந்த மணிப்பர்சை உரியவரிடம் ஒப்படைப்பு டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பு டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு

Update: 2024-12-27 05:30 GMT
குண்டடம் அருகே உள்ள ஜோதியம்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 19) டிராக்டர் டிரைவர். இவர் திருப்பூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் அவிநாசி பாளையம் வழியாக வந்து கொண்டிருந்தார் அப்போது ரோட்டில் ஒரு  பர்சை கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது ரொக்கம் ரூ.9700 இரண்டு வங்கி ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் கணவன் மனைவி போட்டோக்கள் இருந்தது. ரேஷன் கார்டு முகவரியில் தாராபுரம் அம்பேத்கர் தெரு என்று இருந்தது. பிரவீன் குமார் தாராபுரத்தைச் சேர்ந்ததனியார் ஆம்புலன்ஸ்  டிரைவர் பாலாவிற்கு தகவல் தெரிவித்து  விசாரிக்க கூறியிருந்தார். அவர் விசாரித்த போது அந்த பர்ஸ் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் ரூபிணி லாரன்ஸ் தம்பதிகளுக்கு சொந்தமானது என்பதும், திருப்பூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வரும்போது பர்சை தவறவிட்டதும் தெரிய வந்தது. இதை அடுத்து அந்த பர்சை பிரவீன் குமார் தாராபுரம் காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் பர்சை ஒப்படைத்தார். ரூபிணி லாரன்ஸிடம் போலீசார் விசாரித்து அவர்களும் ஒப்படைத்தனர். ரோட்டில் கிடந்த பர்சை உரியவரிடம்  ஒப்படைத்த டிராக்டர் டிரைவரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Similar News