சிறுமலை அருகே தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

மதுரை வாடிப்பட்டி அருகே தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-12-27 05:43 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சிறுமலை மீனாட்சிபுரத்தில் வசிக்கும் காமாட்சியின் மகன் வெற்றிவேல் (32) என்பவருக்கு மேகலா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீடு உள்ள சாணார்பட்டிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது .இதனால் வேதனையடைந்த வெற்றிவேல் நேற்று முன்தினம் (டிச.25) மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் மாரியம்மாள் நேற்று (டிச.26)வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News