புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் மாவட்ட காவல் துறையால் வைக்கப்பட்ட சிசிடி கேமரா தற்போது செயல் இழந்து கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் காவல்துறையினால் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. மேலும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிசிடி கேமராவை சரி செய்து கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.