அழகர்கோவில், மருதமலையில் நாள்​ முழுவதும் அன்னதானம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அழகர்​கோ​யில், மருதமலை கோயில்​களில் நாள் முழு​வதும் அன்ன​தானம் வழங்​கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்​தார்.

Update: 2024-12-27 07:44 GMT
இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில், கோயில்​களில் நாள் முழுவதும் அன்ன​தானம் வழங்​கும் திட்​ட​மானது ஸ்ரீரங்​கம் - ரங்கநாத சுவாமி கோயில், பழனி - தண்டா​யுத​பாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வந்தது.இந்நிலை​யில், இந்த அரசு பொறுப்​பேற்​றபின், கடந்த 2021-ம் ஆண்டு திருச்​செந்​தூர் - சுப்​பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் - மாரி​யம்மன் கோயில், திருத்தணி - சுப்​பிரமணிய சுவாமி கோயில்​களி​லும், 2022-ம் ஆண்டு ராமேசு​வரம் - ராமநாதசுவாமி கோயில், திரு​வண்ணாமலை - அருணாச்​சலேசுவரர் கோயில், மதுரை - மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில்​களி​லும், இந்த ஆண்டு ஜனவரியில் பெரியபாளையம் பவானியம்மன், மேல்​மலை​யனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனைமலை மாசாணி​யம்மன் ஆகிய 3 கோயில்கள் என கூடு​தலாக 9 கோயில்​களில் நாள் முழு​வதும் அன்ன​தான திட்டம் முதல்​வ​ரால் தொடங்கி வைக்​கப்​பட்டது. இந்நிலை​யில், இத்திட்​டத்தை மேலும் விரிவுபடுத்​தும் விதமாக, அழகர்கோவில், கள்ளழகர், மருதமலை சுப்​பிரமணி​யசுவாமி ஆகிய 2 கோயில்​களில் இத்திட்​டத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். மேலும், பழனி - தண்டா​யுத​பாணி சுவாமி கோயில் சார்பாக நடத்​தப்​படும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரி​களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்​கப்​பட்டு வருகிறது. இந்நிலை​யில், ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரி​களில் மதிய உணவு வழங்​கும் திட்​டத்​தை​யும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்​தார். இதன்​மூலம் 5,775 மாணவ, மாணவியர் பயன்​பெறு​வர். கல்லூரி​களில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்​கும் திட்டம் இந்து சமய அறநிலை​யத்​துறை திருக்​கோ​யில் கட்டுப்​பாட்​டிலுள்ள கல்லூரி​களில்​தான் முதன்​முதலில் செயல்​படுத்​தப்​பட்​டுள்ளது என்பது குறிப்​பிடத்​தக்​கது.இந்நிகழ்ச்​சி​யில், அமைச்சர் பி.கே.சேகர்​பாபு, பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சி​யர்கள் எம்.எஸ்​.சங்​கீதா, கிரந்​தி​கு​மார் பாடி, ஆணை​யர் பி.என்​.ஸ்ரீதர், கூடு​தல் ஆணை​யர் சி.ஹரிப்​ரியா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News