கரூரில்,முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.

கரூரில்,முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.

Update: 2024-12-27 08:35 GMT
கரூரில்,முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பாரதத்தின் பிரதமராக செயலாற்றியவர் பொருளாதார மேதை மன்மோகன் சிங். கடந்த ஒரு வருட காலமாக உடல் நலம் குன்றி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். 92 வயதை கடந்த மன்மோகன் சிங் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மன்மோகன் மறைவிற்கு உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே மறைந்த தங்களது தலைவருக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டான அருகே, திரு மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு தலைமையில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சின்னசாமி, நகர துணை தலைவர் குமார், நகர மாணவரணி தலைவர் வெங்கடேஸ்வரன், மாநகர துணை தலைவர் கண்ணப்பன், மாநில வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் முகமது அலி, நகர செயலாளர் பாலாஜி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர்.

Similar News