அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முன்னாள் எம்எல்ஏ ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ளும் இருக்கும் அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை முன்னாள் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-12-27 08:36 GMT
தர்மபுரி மாவட்டத்திற்கு வருகின்ற (31.12.2024) அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து அதற்கான ஏற்பாட்டினை இன்று டிசம்பர் 27 தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி Ex.MLA நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் பழைய இண்டூர் மற்றும் பாலவாடி கிராமங்களில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வைகுந்தம் , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் , அணிகளின் துணை அமைப்பாளர்கள் ரவி , இளங்கவி , காந்தி , நீதிபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News