முதியவரை தாக்கிய வாலிபர் கைது
காளையார்கோவில் அருகே முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கருவிகண்மாயை சேர்ந்தவர் தைனிஸ்(78). இவர் தனது சகோதரர் மகன் ஜான் பிரிட்டோ(29) என்பவர் தினம்தோறும் மது அருந்துவதை கண்டித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கோபத்தில் இருந்த ஜான் பிரிட்டோ(29) இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயம் அடைந்த தைனிஸ்(78) காளையார்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காளையார்கோவில் போலீசார் ஜான் பிரிட்டோவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.