சங்கரன்கோவிலில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-12-27 15:08 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சில் திட்டத்தை நடைமுறைப்படுத்திட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் வட்ட கிளை தலைவர் நவநீதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளைச் செயலாளர் மோகன்ராஜ் மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், வருவாய்த்துறை வட்ட கிளை தலைவர் கடல் குமார், வட்டக்கிளை பொருளாளர் முருகையா உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News

கைது
மிதமான மழை