கந்திலி ஒன்றியத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்
கந்திலி ஒன்றியத்தில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கோமாரி தடுப்பூசி போடும் முகாமினை எம்எல்ஏ துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோட்டூர், பள்ளத்தூர் ஆகிய இரு ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பங்கேற்று கோமாறி தடுப்பூசி போடும் முகாமினை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் முரளி சதானந்தம், ஒன்றிய செயலாளர்கள் சு.முருகேசன், துணை சேர்மன் ஜி.மோகன்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி கதிர்வேல், கவிதா குமார், கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.