தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரியலூர்,டிச.28- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க அரியலூர் வட்டச் செயலர் அம்பேத்கர் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முக மூர்த்தி, சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :