கந்திலி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!
கந்திலி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுகாதல் ஜோடி தஞ்சம்! மெண்டலி டிஸ்டர்ப் ஆன பெண் அதனால் வீட்டிற்கு அனுப்புங்க பெற்றோர் கதறல்! நான் காதலனுடன் செல்வேன் என பெற்றோரிடம் நேருக்கு நேர் கூறிய காதலி ஏமாற்றத்துடன் திரும்பிய பெற்றோர்! கிருஷ்ணகிரி மாவட்டம் கௌதாளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் மகள் மௌனிகா (19) இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள நியூ பாலவின் இன்டர்நேஷனல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் சின்ன எலவம்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திக் ஓசூர் போக்குவரத்து பனிமனையில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த அரசு பேருந்தில் தினம் தோறும் மௌனிகா கல்லூரி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அப்போது கார்த்திக்கும் மௌனிகாவுக்கும் இடையே காதல் வயப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து காதலர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் உள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று பாதுகாப்பு கேட்டு காதலர்கள் இருவரும் கந்திலி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர்கள் தனது பெண் மெண்டலி டிஸ்டர்ப் ஆகியிருக்கிறார் மேலும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார் அவருக்கு சரியான முடிவு எடுக்கத் தெரியாது அதன் காரணமாக பெண்ணை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என காவல் நிலையத்தில் முறையிட்டு கதறி அழுதனர். இதனை விசாரித்த போலீசார் உடனடியாக மௌனிகாவை நேரில் வைத்து பெற்றோர்கள் முன்னிலையில் நீங்க சரியாக இருக்கிறீர்களா? உங்களால தெளிவான முடிவு எடுக்க முடியுமா? மேலும் நீங்க பெற்றோரிடம் செல்ல நினைக்கிறாயா? என்று கேட்டபோது சற்றென்றும் யோசிக்காமல் நான் என்னுடைய காதல் கணவன் கார்த்திக்கிடம் செல்வதாக கூறினார். இதனை கேட்ட பெற்றோர்கள் காவல் நிலையம் முன்பே கத்தி கதறி அழுதனர். 19 வருடமாக பெற்று வளர்த்த பிள்ளை தற்போது மற்றொரு நபரிடம் செல்வதாக கூறியதன் காரணமாக பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் காண்போம் நெஞ்சை நெகிழச் செய்தது.