தாராபுரம் ராஜ வாய்க்காலில் அகற்றப்பட்ட கழிவுகள் சாலை ஓரத்தில் தேக்கம்

அரசு மருத்துவமனை அருகே ராஜ வாய்க்காலில் அகற்றப்பட்ட கழிவு சாலை ஓரத்தில் தேக்கம்

Update: 2024-12-27 15:28 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களில் கடந்த வாரங்களில் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் மிதந்து வந்த குப்பைகள் ராஜவாய்க்காலில் வந்து ஆங்காங்கே தேங்கி தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஆங்காங்கே ராஜவாய்க்காலில் தேங்கிய கழிவுகளை அப்புறப்படுத்தினர். அப்போது அப்புறப்படுத்தும் போது தாராபுரம் கரூர் சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள வாய்க்காலில் தேங்கிய கழிவுகளை ஜேசிபி எந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தினர். தற்போது ஒரு வாரத்துக்கு மேலாகியும் அரசு மருத்துவமனை அருகே ராஜ வாய்க்காலில் தேங்கிய கழிவுகளை அப்புறப்படுத்திய பொதுப்பணி துறையினர் அந்த குப்பைகளை அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் விட்டு சென்றனர் இதனால் ராஜ வாய்க்கால் அருகே சாலையோரத்தில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் இது போன்று ராஜவாய்க்காலில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்தாமல் சாலையிலேயே குட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

Similar News