சத்தியமங்கலத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
சத்தியமங்கலத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
சத்தியமங்கலத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் மொட்டை மாடி சுவரில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்