சத்தியமங்கலத்தில் பயணியிடம் செல்போன் பறித்தவருக்கு தர்ம அடி

சத்தியமங்கலத்தில் பயணியிடம் செல்போன் பறித்தவருக்கு தர்ம அடி

Update: 2024-12-28 03:55 GMT
சத்தியமங்கலத்தில் பயணியிடம் செல்போன் பறித்தவருக்கு தர்ம அடி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்துக்கு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் ஏற முயன் றார் அப்போது அவருடைய சட்டைப்பையில் இருந்த செல் போனை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினார். உடனே திருடன், திருடன் என பன்னீர்செல்வம் சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 28) என்பதும், குடிபோதையில் அவர் பன்னீர்செல்வத்தின் செல்போனை எடுத்ததும். தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News