மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் ..*
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் ..*
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் .. விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை ,பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறு சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.