தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தரமில்லை எனக் கூறி ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தரமில்லை எனக் கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.*;

Update: 2024-12-28 05:42 GMT
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தரமில்லை எனக் கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் பவித்ர தலைமையில் நடைபெற்றது. பாதாள சாக்கடை வரி உயர்வு, தெரு நாய்களுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும், அனைத்து தெருக்களிலும் எல்இடி விளக்கு புதுப்பிக்க வேண்டும், நிர்வாக செலவு குறித்து 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சாக்கடை அடைப்பு பராமரிப்பு கூலியை மக்களிடம் வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும், தறிக்கூடங்களுக்கு நிர்ணயிக்க பட்ட வரியை வகைப்படுத்த வேண்டும், வாகன காப்பகம் வரி நிர்ணயத்தை குறைக்க வேண்டும், தனியார் இறைச்சி வெட்டுக் கூடத்திற்கான வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். கேள்வி நேரத்தில் அதிமுக கவுன்சிலர் சோலை மலை, தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் கணேஷ், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த குடிநீர் திட்டத்திற்கான குழாய்களும் தரமற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு அதிமுக கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சக திமுக கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கவுன்சிலர்களை தலைவர் அமைதிப்படுத்தினார்

Similar News