சிவன்மலையில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு
சிவன்மலையில் உள்ள ஆட்டோக்களில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு
உலக எய்ட்ஸ் தினத்தை அனுசரிக்கும் விதமாக பொது மக்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காங்கயம் சிவன்மலையில் உள்ள ஆட்டோக்களில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்படடது மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்த கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு எய்ட்ஸ் ஒழிப்போம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை அன்பும் ஆதரவும் கொடுத்து அரவனைபபோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இந்நிகழ்வு சுகவாழ்வு மைய ஆலோசகர் கருப்புசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் சுரேஷ் விழிப்புணர்வு பதாகை ஒட்டினார் இந்நிகழ்வில் காசநோய் பணியாளர் திருமிகு வளர்மதி சிறப்புறையாற்றினார் மேலும் இந்நிகழ்வில் சிவன்மலை கிரமா செவிலியர் லட்சுமி சுரேஷ் , கமல் , செந்தில் குணா, ராசுக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக நிலா மணி நன்றி கூறினார்