ஆப்பநாடு மறவர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு.

ஆப்பநாடு மறவர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு. திருப்பூரில் மாநில பொதுச்செயலாளர் வி. டி. பாண்டியன் அறிவிப்பு!

Update: 2024-12-28 11:24 GMT
ஆப்பநாடு மறவர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு. திருப்பூரில் மாநில பொதுச் செயலாளர்.வி. டி.பாண்டியன் அறிவிப்பு. திருப்பூரில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தாராபுரம் சாலையில் உள்ள அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் வி.டி‌.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி. டி.பாண்டியன் நெல்லையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செந்தில் மல்லர் என்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக, தரக்குறைவாக பேசி உள்ளார் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ராமநாடு மாவட்டத்தில் ஆப்பநாடு மறவர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழகம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் செந்தில் மல்லரை கைது செய்யாத காவல்துறை தங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மருதுள்ளதாகவும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து  ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக் தேவர் .திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் தேவர்.திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கொலம்பஸ் பாண்டியன் தேவர்.திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் .ராஜா தேவர் திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர்  முருகன் தேவர். திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் .அழகுராஜா தேவர் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கர்ணன் தேவர் திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சந்தன பாண்டியன் தேவர் திருப்பூர் புறநகர் மாவட்ட துணை செயலாளர் சௌந்தரபாண்டியன் தேவர்.திருப்பூர் புறநகர் மாவட்ட தொழில் சங்க  செயலாளர் .கணேசன் தேவர்.திருப்பூர் புறநகர் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் .விக்கி தேவர். ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்

Similar News