அரசு நிதி உதவி பெறும் தனியாா் பள்ளி நிா்வாகிகள் பொதுக்குழுக் கூட்டம்
தனியாா் பள்ளி நிா்வாகிகள் பொதுக்குழுக் கூட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி நிா்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க மாநிலத் தலைவா் கே. தேவராஜ் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் தாயப்பன், சண்முகநாதன், ஜேபஸ் பொன்னையா, பன்னீா் செல்வம், ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவு செலவு கணக்குகளை கணேஷ்குமாா், ஆண்டறிக்கையை பாஸ்கரன் ஆகியோா் சமா்ப்பித்தனா். வழக்குரைஞா் நெல்சன் முன்னிலையில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. அதில், புதிய மாநிலத் தலைவராக ஆா். கிரிதரன், பொதுச் செயலராக கணேஷ்குமாா், பொருளாளராக ஞானப்பிரகாசம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளை உறுப்பினா்கள் வாழ்த்திப் பேசினா். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் சாமி, காமராஜ், சேகா் பாண்டியன், ரவிச்சந்திரன், வெங்கடேசன், நல்லசிவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஜெய்சிகாமணி நன்றி கூறினாா். கூட்டத்தில், மாநிலம் முழுவதுமிருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.