குமரி மாவட்டம் அருமனை அருகே நேற்று கேரளா பதிவெண் கொண்ட ஒரு டெம்போ சாலையில் பழுதாகி நின்றது. அப்போது அந்த வாகனத்தில் இருந்து கழிவு நீர் வடிந்த நிலையில் துர்நாற்றம் வீசியது. அப்போது அந்த வழியாக வந்த விபின் (29) என்ற வாலிபர் அதை தனது செல்போனில் வீடியோ பிடித்தார். இதை பார்த்த டெம்போ டிரைவர் அப்பகுதி பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே பஇரண்டு பேர் சம்பவ இடத்திற்கு வந்து அவரும் டெம்போ டிரைவருமாக சேர்ந்து விபினை சரமாரியாக தாக்கி செல்போனை பறித்து உடைத்தனர். காயமடைந்த விபின் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகார் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் கேரளாவை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரை கைது செய்தனர். பன்றி பண்ணை உரிமையாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.